இந்தியா – இங்கிலாந்து அணியின் நடந்து முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் பிட்ச் பற்றி யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணியின் இரண்டு நாட்கள் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் பந்து வீசியுள்ளார். மேலும் நடந்து முடிந்த இந்த டெஸ்ட் போட்டியில் அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் சரியில்லை என்றும், இதில் ஹர்பஜன்சிங் அல்லது அணில் கும்ப்ளே ஆகியோர் பந்துவீசி இருந்தால் 800 முதல் 1000 விக்கெட்டுகள் வரை எடுத்திருப்பார்கள் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் யுவராஜ் சிங்கின் கருத்திற்கு மற்றொரு முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் என்பவர் இந்த காலத்தில் உள்ள டிஆர்எஸ் முறை அப்போது இருந்திருந்தால் ஹர்பன் சிங் அல்லது அனில் கும்ப்ளே ஆகியோர் 500 முதல் 1,000 விக்கெட்டுகள் வரை எடுத்திருப்பார்கள் என்ற கருத்தை நான் ஆதரிக்கிறேன், ஆனால் பிட்ச் பற்றி அவர் சொல்லிய கருத்தை நான் ஆதரிக்கமாட்டேன், பிட்ச் என்பது இரு அணிகளுக்கும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.