Categories
மாநில செய்திகள்

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் செய்தித்தாள்கள் மூலம் விளம்பரம் செய்து தங்கள் மீதான குற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன.

மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அது மட்டுமன்றி அனைத்து கட்சிகளும் கூட்டணி பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. இதற்கு மத்தியில் தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் உள்ளூர் செய்தி தாள்களில் தங்கள் மீதான வழக்குகள் குறித்து விளம்பரம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. கிரிமினல் வழக்கு குறித்த விவரத்தை விளம்பரம் செய்யும் வேட்பாளர்கள் அதை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் யார் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |