Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது”… ஒருதலைக் காதலால் நேர்ந்த கோர சம்பவம்..!!

மாணவியின் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சியின் கீழ் வழக்குப்பதிவு செய்துத்துள்ளனர் .

அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கி, வேளாண் புலத்தில் தோட்டக்கலை பட்டயப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . நேற்று மாலை நேரத்தில் ஏ.டி.எம் மில் பணம் எடுப்பதற்காக மாணவி விடுதியை விட்டு வெளியே சென்றுள்ளார். மருத்துவ குடியிருப்பு பகுதி வழியே அவர் சென்று கொண்டிருந்தபோது ,எதிரே வந்த வாலிபர் அவரை ஆபாசமாக திட்டியுள்ளார். அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்து உள்ளார்.

இதனால் காயம் அடைந்த மாணவியின் வலியால் அலறினாள். அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அவ்வழியே சென்றவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் அந்த வாலிபன் போலீசாருக்கு பயந்து அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். தகவலறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மற்றும் அவர்கள் இருவரும் உள்ள மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த மாணவி மற்றும் வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ,அந்த வாலிபர் திருச்சி மாவட்டம் சமயபுரத்துக்கு அருகே உள்ள பள்ளூர்படை கிராமத்தை சேர்ந்த 30 வயதான பிரான்சிஸ்சேவியர் என்றும் ,இவர் ஆசிரியர்  படிப்பை முடித்துவிட்டு ,அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த மாணவியும் அந்தப் பள்ளியில் படித்தவர் ஆவார். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவியை பிரான்சிஸ் சேவியர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அந்த மாணவி வேறு ஒருவருடன் பல்கலைக்கழகத்தில் பழகி வருவதாக பிரான்சிஸ் சேவியர் க்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அந்த மாணவியின் இவர் கொலை செய்ய  முயற்சி செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். காயமடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரான்சிஸ் சேவியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |