பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களில் பத்தில் நான்கு நபர்கள் ஸ்மார்ட் போனிலிருந்து விலகியிருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் 18 முதல் 30 வயதுடையவர்களில் பத்தில் நான்கு நபர்களுக்கு தங்கள் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இருக்க முடியாது என்ற அதிர்க்கரமான தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் முதல் ஆராய்ச்சி இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 1043 நபர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதில் அடிமையாகியுள்ளனர். இதனால் உறக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து தொலைபேசியை வாங்கி விட்டால் அதிக கவலைக்குள்ளவதோடு, தங்கள் கட்டுப்பாட்டை இழப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்திருக்கிறது.
இந்த ஆய்வினை லண்டன் கிங்ஸ் காலேஜ் ஆப் சைக்காலஜி சைகாட்ரி & நியூரோ சயின்ஸ் வெளியிட்ட இந்த ஆய்வில் 38.9% மக்கள் தினசரி அதிக நேரம் தொலைபேசியுடன் செலவிடுவதோடு தொலைபேசிக்கும் தங்களுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலானோர் தூக்கமின்மை பிரச்சனையால் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் இதில் 24.7% பேர் தினசரி 3 மணி நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதாகவும், 18.5% நபர்கள் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக உபயோகிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியுள்ளதாவது, உறக்கத்தை கெடுக்கும் அளவில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது மனநலம் தொடர்புடைய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கிறார். மேலும் இவ்வாறு தொடர்ந்து ஸ்மார்ட்போன் உபயோகிப்பது உறக்கம் மற்றும் மன ஆரோக்கியம் போன்றவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளை ஆராய மேலும் ஆராய்ச்சி அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.