Categories
உலக செய்திகள்

தூங்கி எழுந்த பெண்ணிற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி…. கோடீஸ்வரர் ஆனது எப்படி?அற்புதமான தருணத்தை மகிழ்ச்சியுடன் பகிர்வு…!!

கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே விடியலில் பணக்காரர் ஆனதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த சமந்தா லோவ் என்ற பெண்ணுக்கு லொட்டோ மேக்ஸ் என்ற லாட்டரி குலுக்களின் $ 637,000 பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து சமந்தா கூறியதாவது, நான் வழக்கம் போல் தூங்கி எழுந்த பின்பு எனது இ-மெயில் பக்கத்திற்கு சென்று பார்த்தேன். அப்போதுதான் எனக்கு லாட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்திருக்கிறது என்ற தகவல் வந்திருந்தது.

அதனை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். என் முகம் முழுவதும் புன்னகையால் நிறைந்திருந்தது. இந்தப் பணத்தை முதலில் சில கட்டணங்களைச் செலுத்த பயன்படுத்த உள்ளேன் என்று சமந்தா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Categories

Tech |