கொரோனவை தடுக்க கூடிய “தங்கத் தர” தடுப்பூசிகளுக்கு உலக நாடுகள் காத்திருக்க வேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
“தங்கத் தரம்” வாய்ந்த கொரோனா தடுப்பூசிகளுக்காக உலக நாடுகள் காத்திருக்கத்தான் வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் Dominic Raab வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தங்கள் நாட்டிற்கு எப்பொழுது கிடைக்கும் என்று குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் நாடுகள் காத்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வை நான் புரிந்து கொண்டேன் என்று Dominic Raab கூறியுள்ளார்.
மேலும் அவர், “கொரோனாவுக்கு எதிராக பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டாலும், எந்தத் தடுப்பூசி மக்களுக்கு பாதுகாப்பானவை என்று கூறும் விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையை அந்தெந்த நாட்டின் நிர்வாகங்கள் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் Covax என்ற திட்டத்தின் கீழ் WHO இலவசமாக வழங்கும் கொரோனாவை தடுக்க கூடிய “தங்கத் தர” தடுப்பூசிக்காக உலகின் வளரும் மட்டும் வளர்ச்சியடையாத நாடுகள் சற்று காத்திருக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.