Categories
மாநில செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடும்…. ஆசிரியர்களுக்கு விரைவில்…. ரெடியா இருங்க…!!

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசிகள் கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் கொண்ட பட்டியலில் உள்ள அனைவருக்குமே தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாளில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |