பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ் இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து தற்போது அடுத்த இரண்டு வருடங்களில் மீண்டும் ஒரு கோடி இலவச சிலிண்டர் இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டிருப்பதாக எண்ணெய் துறை செயலாளர் தருண் கபூர் தெரிவித்துள்ளார். மேலும் குறைவான ஆவணங்களை வைத்து சிலிண்டர் இணைப்பை பெற்றுக்கொள்ளலாம். தற்போது போல ஒரு விநியோகஸ்தர்களிடம் மட்டுமே சிலிண்டர்களை நிரப்பாமல் மூன்று விநியோகஸ்தர்களிடம் சிலிண்டர் நிரப்பிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.