மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி வருகின்ற ஆகஸ்டு மாதம் 21 -ஆம் தேதி தன்னுடைய M.B.V ரக காரின் ரக்கட் வெர்ஷனை அறிமுகம் செய்கிறது. இது மாருதி எர்டிகா கிராஸ் என்று கூறப்படுகிறது .புதிய மாடலில் பல்வேறு கிராஸ்ஒவர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . இது தற்போது உள்ள மாடலை விட அழகியதாக உருவாக்கப்பட்டுள்ளது .இந்த கார் முழுவதும் புதிய அப்டேட்கள் செய்யப்படும் செய்யப்பட்டுள்ளன .
மேலும் மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா காரின் C.N.G வேரியண்ட்டை அறிமுகம் செய்கிறது.தற்போது உள்ள எர்டிகா கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் உள்ளது .இதற்கு முந்தைய வெர்ஷனில் C.N.G ஆப்ஷன் வழங்கப்பட்டதைப்போல இரண்டாம் தலைமுறை புதிய மாடலிலும் C.N.G வெர்ஷனை வழங்க மாருதி சுசுகி நிறுவனம் முடிவெடுத்துள்ளது .
இதில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜினை தழுவிய பவர்-டிரெயின் கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது . இந்த என்ஜின் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை எர்டிகாC.N.G மாடல் 1 லிட்டருக்கு 22.8 கிலோமீட்டர் மைலேஜ் கொடுத்தது .புதிதாக அறிமுகமாகியுள்ள C.N.G மாடலின் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் ஒரு லிட்டருக்கு சுமார் 25 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என தெரிகின்றது .