கடுமையான வறட்சியால் தவிக்கும் மடகாஸ்கர் நாட்டிற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கர் நாட்டில் கடும் புயல் ஏற்பட்டது. அந்த புயலின் தாக்கத்தால் மடகாஸ்கர் நாடு முழுவதும் கடும் வறட்சிக்கு தள்ளப்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவித்தனர். மடகாஸ்கர் நாட்டு மக்களின் நிலைமையை சரி செய்வதற்காக அந்நாட்டின் அரசு இந்தியாவின் உதவியை நாடியது. ஆகையால் இந்தியா மடகாஸ்கர் நாட்டிற்கு உதவி செய்யும் வகையில் மடகாஸ்கர் அரசுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியையும் மற்றும் ஒரு லட்சம் HCQ மாத்திரைகளையும் இந்திய கடற்படையின் ஜலஷ்வா கப்பல் மூலம் மடகாஸ்கர் நாட்டிற்கு இந்திய அரசு அனுப்பவைத்தது.
மடகாஸ்கர் நாட்டின் நிலைமையை புரிந்து இந்திய அரசு உதவி செய்ததற்காக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ .எஸ் ஒலிவியா மிகுந்த நன்றியை தெரிவித்தார். இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துயரென்று வருகையில் மடகாஸ்கர் நாட்டிற்கு உதவி செய்ய முதல் நாடாக இந்தியா முன்வந்துள்ளதை நினைத்து மிகுந்த நெகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்தார்.