கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் ராணி. அதே பகுதியை சேர்ந்தவர் துளசி. இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வண்டலூர் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சாலையை கடக்க முயற்சி செய்யும் போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் இருவரின் மீதும் மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு ராணியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக துளசியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.