Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான் அவளை காதலிச்சேன்… அதான் அப்படி பண்ணிட்டேன்… அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…!!

மாணவியை கொலை செய்ய முயன்ற ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் 18 வயதுடைய மாணவி. இவர் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி தோட்டக்கலை பட்டயப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரிக்கு அருகில் உள்ள ஏ.டி.எம்-யில் பணம் எடுப்பதற்காக கல்லூரிக்கு வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் அவர் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் மாணவியை ஆபாசமாக திட்டி தன் கையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதனால் மாணவி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அங்கு சென்றவர்கள் ஓடி வந்து வாலிபரை பிடிக்க முயற்சித்தபோது அதே கத்தியை வைத்து வாலிபரும் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். இதனால் அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில் அந்த வாலிபரின் பெயர் பிரான்சிஸ் சேவியர் என்பதும் அவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அதே பள்ளியில் மாணவியாக பயின்றவர் தான் இந்த மாணவி. அவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி படிப்பிற்காக கல்லூரிக்கு வந்த போது ஒரு இளைஞரிடம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் சேவியர் மாணவியின் கழுத்தை அறுத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பிரான்சிஸ் சேவியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |