இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், உரையாடிக் கொள்ளவும், இணையத்தில் மூலமாக நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு செல்போன்களை அதிக நேரம் உபயோகப்படுத்தும் போது பேட்டரி தீர்ந்து போக வாய்ப்பிருக்கிறது. பேட்டரி என்பது செல்போனுக்கு முக்கியமான ஒன்று. அந்த பேட்டரியை எவ்வாறு சேமிக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
உங்களுடைய செல்போனில் உள்ள பேட்டரி தடிமனாக இருந்தால் அதை கட்டாயம் மாற்றுவது நல்லது. ஏனெனில் அவ்வாறு இருப்பது பேட்டரியை வெடிக்க செய்து விடும் ஆபத்து இருக்கிறது. செல்போனை சார்ஜ் போடும் போது 100% போட வேண்டிய தேவை கிடையாது. 80% போதுமானது. அதேபோல சார்ஜ் தீரும் வரை செல்போன் உபயோகிப்பது நல்லது அல்ல. 25 சதவீதம் இருக்கும் போதே சார்ஜ் நிரப்புவது நல்லது. இதனால் பேட்டரியின் ஆயுள் காலத்தை அதிகரிக்கும். செல்போனின் பிரைட்னஸை குறைத்து வைத்தால் சார்ஜ் குறைவதை தடுக்கலாம்.
சரியான சார்ஜரை உபயோகிக்க வேண்டும். அந்தந்த செல்போனுக்கு உரிய சார்ஜரை பயன்படுத்த வேண்டும். வேறு சார்ஜரை உபயோகபடுத்தினால் பேட்டரியின் ஆயுளை குறைக்கும். தேவையற்ற செயலிகளை செல்போனில் இருந்து நீக்குவது நல்லது. ஏனெனில் இந்த செயலிகள் தானாகவே இயங்கிக் கொண்டிருப்பதால் செல்போன் சார்ஜ் இறங்க வாய்ப்பு இருக்கிறது. லைவ் வால்பேப்பர் பயன்படுத்துவதை தவிர்த்து டார்க் மோடு ஆப்ஷன்களை பயன்படுத்தலாம். நமக்கு தேவையான அளவு பிரைட்னஸ் வைத்துக் கொண்டால் அதன் மூலமும் சார்ஜ் இறங்குவதை தவிர்க்க முடியும்.