தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாஜகவுக்கு 24 முதல் 27 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதிகாரபூர்வமாக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைப்போலவே தேமுதிகவுக்கு 13 தொகுதி ஒதுக்க அதிமுக முடிவு எடுத்துள்ளது.