Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“பொள்ளாச்சி கொடூரம்”5 பேரின் காவல் நீட்டிப்பு… கோவை நீதிமன்றம்..!!

பொள்ளாச்சியில் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திய 5 பேரின் நீதிமன்ற காவலை கோவை நீதிமன்றம் நீட்டிப்பு செய்துள்ளது.

பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல்  கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இக்கும்பலை கைது செய்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சேலம்  சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு,சபரிராஜன், வசந்த பாபு,  மணிவண்ணன், சதீஷ் உள்ளிட்ட 5 பேரும் காணொலி காட்சி மூலம் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின் நடைபெற்ற விசாரணையில் 5 பேரின் நீதிமன்ற காவல் வருகின்ற ஜூலை 29ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |