தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் விசிக இடையே இழுபறி நீடிப்பதாகவும் தேர்தல் தொடர்பாக இன்னும் முடிவு எட்டவில்லை எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும். தேர்தல் தொடர்பாக இன்னும் முடிவை எட்டவில்லை தொடர்ந்து பேசி வருகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். வேட்பாளர் குறித்த முடிவுகள் மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி பங்கீட்டில் திமுக மற்றும் வி நிறைய இழுபறியில் நீடிக்கும் நிலையில் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.