மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தனது மனைவியுடன் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
இந்தியா கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்ட covid-19 தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் 1 தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. அதில் 60 க்கும் மேற்பட்டோர் மற்றும் இணை நோய் பாதிப்பு கொண்ட 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி பாரத் பயோடெகின் தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.
இதனை அடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தன் மனைவி நுட்டான் கோயிலுடன் டெல்லி இருதயம் மற்றும் நுரையீரல் மையத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்கள் .தற்போது பல்வேறு தலைவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். அதன் பிறகு ஹர்ஷ்வர்த்தன் நாட்டு மக்கள் அனைவரும் எந்தவித அச்சமும் தயக்கமும் இல்லாமல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.