தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒவ்வொரு கட்சியினரும் விருப்ப மனு பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு எப்போதுமே வித்தியாச வித்தியாசமான முடிவை தான் எடுப்பார். தற்போது 4 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக ஒரு மனுவை அளித்துள்ளார். இதனால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. அதாவது மதுரை வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுவதாக விருப்ப மனு அளித்துள்ளார். மேலும் தலைமை எந்த தொகுதி வழங்கினாலும் அந்த தொகுதியில் தான் போட்டியிட தயார் என்றும் தெரிவித்துள்ளார்.