ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி தன்னிடம் இருந்த பிரபல ஓவியத்தை 84 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். இவர் ஓவியம் வரையக் கூடிய திறமையும் கொண்டிருந்தார். அப்போது இவர் மொரோக்கோ நாடு குறித்த ஒரு ஓவியத்தை வரைந்திருந்தார். அந்த ஓவியம் மிகவும் பிரபலமடைந்தது.
அதன்பின் அந்த ஓவியம் பலமுறை ஏலத்திற்கு வந்தது. அதனை பல பேர் வாங்க அதிக ஏலத் தொகையை கூறினர். ஏல முடிவில் அந்த ஓவியத்தை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி வாங்கினார். இந்நிலையில், அந்தப் பிரபல ஓவியத்தை ஏஞ்சலினா ஜோலி தற்போது 84 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். அவர் ஏன் தற்போது இந்த ஓவியத்தை விட்டார் என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை.