அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்கா காந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு 2 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை அடுத்து அனைத்து கட்சியினரும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அவர் பேசும் போது நாங்கள் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 2000 ரூபாய் வழங்குவோம். தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தினக்கூலி 365 ரூபாயாக உயர்த்தப்படும். 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று உறுதி அளித்தார். இது வாக்குறுதிகள் அல்ல. உத்தரவு என்று கூறினார்கள். எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும்போது இங்கு CAA செயல்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்படும். 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.