தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன. அரசியல் கட்சிகள் தனக்குரிய பாணியில் பிரச்சாரங்களை வகுத்து வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி உறுதியான நிலையில் மூன்றாவது அணிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இதனிடையே ரஜினி தொடங்க திட்டமிட்டிருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன கிருஷ்ணமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் 4 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என பதிவிட்டுள்ளார்.
அதில் மகளிரை அதிகாரபடுத்த ஒரு பெண் துணை முதல்வர், அறிவுசார் யூகத்தை எதிர்கொள்ள ஒரு துணை முதல்வர், டாக்டர் அம்பேத்கர் கனவு மெய்ப்பட ஒரு பட்டியலின துணை முதல்வர், அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்திற்கு ஒரு துணை முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
1. மகளிரை அதிகாரப்படுத்த ஒரு பெண் துணை முதல்வர்
2. அறிவுசார் யுகத்தை எதிர்கொள்ள ஒரு துணை முதல்வர்
3. Dr .அம்பேத்கர் கனவு மெய்ப்பட ஒரு பட்டியலின துணை முதல்வர்
4. அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்திற்கு ஒரு துணை முதல்வர்#IMMK #VoteForIMMK #ArjunaMurthy #TNElection2021 pic.twitter.com/T2vd6mgznM
— IMMK | இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி (@immkofficial) March 2, 2021