25 இடங்களில் திருடிய நபர், தான் திருடுவதற்கு முன்பு சூடம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு தான் செல்வேன் என தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கல நகர் பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழகம் முழுவதும் 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி செல்வது வழக்கம். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை காவல் துறையினர் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர். அதற்கு முன்பாக காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பொன்ராஜ் தனக்கு இரண்டு மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் திருட செல்வதற்கு முன்பாக யாரிடமும் மாட்டிவிட கூடாது என்பதற்காக தனது வீட்டில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு தான் வெளியே வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திருட்டு தொழிலில் ஈடுபடும் இவர் திருட போகும் ஊர்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விடுவதாகவும், வழிப்போக்கன் போல் நடந்து சென்று திருடப் போகும் ஊர்களை இரண்டு, மூன்று முறை நோட்டம் விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தேங்காய் மட்டை உரிக்கும் கூர்மையான கம்பியால் வீட்டின் பூட்டை உடைத்து திருடிவிட்டு அந்த நகை மற்றும் பணத்தை உறவினர்களிடம் கொடுத்து வைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இவர் திருடப் போகும் இடங்களுக்கு நடந்து செல்வதாகவும், செல்போன் எடுப்பதைத் தவிர்த்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு திருட போகும் இடங்களில் கண்காணிப்பு கேமரா உள்ளதா என உறுதி செய்த பிறகு அங்கு செல்வதாக தனது வாக்குமூலத்தில் தெயவித்துள்ளார்.