Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் தட்டிலிருந்து புரோட்டா எடுத்துட்டான்” கொலை செய்யப்பட்ட வாலிபர்…. கோவையில் பரபரப்பு…!!

அனுமதி இல்லாமல் அடுத்தவர் தட்டிலிருந்து புரோட்டா எடுத்து சாப்பிட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையார் பாளையம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பணியாற்றும் செங்கல் சூளையில் இருந்த இரண்டு நண்பர்களுடன் ஜெயக்குமார் மது அருந்தி உள்ளார். அப்போது செங்கல் சூளையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வெள்ளங்கிரி என்பவர் புரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ஜெயக்குமார் திடீரென வெள்ளங்கிரி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலிருந்து புரோட்டாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த வெள்ளைங்கிரிக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது ஜெயக்குமார் வெள்ளைங்கிரியின் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

மேலும் ஜெயக்குமார் அங்கு கிடந்த செங்கலை எடுத்து வெள்ளங்கிரியை  தாக்கியுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த நிகழ்வுகளால் மிகவும் கோபமடைந்த வெள்ளைங்கிரி அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் ஜெயக்குமாரின் பின் தலை, முகம் போன்ற இடங்களில் பலமாக தாக்கியதால் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெள்ளங்கிரியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |