Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடை சீசனை முன்னிட்டு….. மும்முரமாக நடைபெறும் பணி…. ரம்யமான காட்சியில் ரெடியாகும் பூங்கா…!!

கோடை சீசனை முன்னிட்டு நேரு பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நேரு பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்க்க வருவர். இந்நிலையில் கோடை சீசன் தொடங்குவதை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே நிலத்தை பதப்படுத்தி பூங்காவில் புதிய மலர் நாற்றுகளை நடுவதற்காக பேரூராட்சிக்கு சொந்தமான பூங்காவிலிருந்து இயற்கை உரம் கொண்டு வரப்பட்டு போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நட முடிவு செய்து உள்ளனர்.

இந்நிலையில் அதன் முதற்கட்டமாக 5 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டதால், அதனை பாதுகாப்பதற்காக தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும்தரைகளை வெட்டி சமன்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. அதோடு இந்த ஆண்டு முதல் பூங்காவிற்கு தேவையான நாற்றுகளை பூங்காவிலே தயாரிக்க நர்சரி அமைத்து மலர் நாற்றுகள் தயார் செய்துள்ளதாக பூங்கா ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு கோடை சீசனுக்கு பூங்கா முழுமையாக தயாராகி விடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |