பிரான்சில் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரான்சில் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் முன்பு இருந்ததைப் போல் அதிகமாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தற்போது இல் து பிரான்ஸ் என்ற மாகாணம் கொரோனா வைரஸ் அதிகமான பரவும் இடங்களின் பட்டியலில் முதல் இடம் வகித்து வருகிறது.
இந்த மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். இந்நிலையில் அந்த மாகாணத்தில் இருக்கும் மருத்துவர்கள் தற்போது கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அது என்னவென்றால், “இங்கு தினமும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்க நாங்கள் போராடி வந்தோம். அனால் தற்போது அந்த முயற்சியில் சோர்வடைந்து விட்டோம். மிகவும் கடுமையான கட்டுப்பாடு ஒன்று அமலில் வந்தால் மட்டுமே இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்” என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.