இலவச வேட்டி சேலைகள் கொண்டு தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில்அரியலூர் மாவட்டத்தில் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகளை துணிகளை கொண்டு மூடி வைத்துள்ளனர். இந்த சிலைகளை மூடுவதற்கு தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக கொடுக்கப்பட்ட இலவச வேட்டி சேலைகள் உபயோகிக்கப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.