Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மார்ச் 11ஆம் தேதி திமுக தேர்தல் அறிக்கை… மக்கள் மனம் கவரும் அறிவிப்புகள்…!!!

தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறது. மேலும் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதில் அதிமுக 23 தொகுதிகளை பாமக கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. மேலும் பாஜக தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு சிறப்பு சலுகை, நீட் விலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு சிறப்பு சலுகை, வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஊதியம், ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு திட்டம், தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |