Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவில் இணையும் கங்குலி ? மே.வ பாஜக தலைவர் கருத்து …!!

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தாலும், பாஜக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வியூகத்தை வகுத்து வருகிறது. திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என மேற்கு வங்கத்தில் உள்ள மக்கள் பிரபல முகங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டு அதற்கான பணிகளை செய்து வருகின்றது.

வருகின்ற ஏழாம் தேதி பிரதமர் மோடி மேற்கு வங்கம் செல்ல இருக்கிறார். பிரதமர் மோடி முன்னிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் உலாவின. இதுகுறித்து மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் போஸ் கூறுகையில், இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக கூட்டத்தில் விவாதம் நடைபெறவில்லை என தெரிவித்தார்.

Categories

Tech |