தமிழகத்தில் நகை கடன் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்த நிலையில் கடன் நிலுவை விவரங்களை கூட்டுறவுத் துறை கோரியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை நகை கடன் ரத்து என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் 6 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் ரத்து செய்யப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில் கடன் நிலுவை விவரங்களை கூட்டுறவு துறை கோரியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். அவரது அறிவிப்பு சினகா நவகண்டம் விவரங்களை கேட்டு அனைத்து மேலாண்மை இயக்குனர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் எழுதியுள்ளார்.