Categories
மாநில செய்திகள்

சசிகலாவை எதிர்க்கும் பழனிசாமி…. இதே நிலைமை தொடர்ந்தால் ஸ்டாலின் ஆட்சி அமைப்பார்…. வெளியான முக்கிய தகவல்…!!

எடப்பாடி பழனிசாமி சசிகலாவை தொடர்ந்து எதிர்த்து வந்தால் ஸ்டாலினை அதிமுகாவே முதல்வர் பதவியில் அமர்த்தி விடும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் நாடு முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. அதன்படி அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள ஓட்டுக்களை அதிமுக பெற வேண்டும் என்றால் சசிகலாவை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அப்படி அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் தென் மாவட்டங்களில் இருந்து ஒரு சீட் கூட அதிமுகாவிற்கு வராது என்றும் அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அமைச்சர் ஒருவர் இந்த தகவலை எடப்பாடி பழனிசாமியிடம் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு எடப்பாடி பழனிசாமி மிகவும் கோபம் அடைந்துள்ளார். மேலும் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தொலைத்து விடுவேன் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் சசிகலாவிற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றால் அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் தயங்க மாட்டார் எனத் தெரியவந்துள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை தொடர்ந்து எதிர்த்து வந்தால் 1989ல் ஏற்பட்ட அதே நிலைமை தற்போதும் ஏற்பட்டு, ஸ்டாலினை அதிமுகாவே முதல்வர் பதவியில் அமர்த்தி விடும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |