குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள் என்று ஜிம்மி நீசம் உருக்கத்துடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியும் அனைத்து விக்கெட்டையும் இழந்து 21 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டை ஆனது. பட்லர் 59 ரன்களும், பென்ஸ்டோக்ஸ் 84* ரன்களும் எடுத்தனர். இதனால் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சூப்பர் ஓவரில் அணிக்கு போராடிய பட்லரும், ஸ்டோக்ஸும் களமிறங்கினர். போல்ட் வீசிய அந்த ஓவரில் இருவரும் சேர்ந்து 15 ரன்கள் எடுத்தனர். பின்னர் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்மி நீஷமும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய இந்த ஓவரில் நியூசி அதே 15 ரன்கள் எடுத்தது. இதில் நீசம் 1 சிக்சர் அடித்து 15 ரன்களுக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதில் கடைசி 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட, கப்தில் அடித்து விட்டு 2 ரன்கள் ஓட முயன்ற போது ரன் அவுட் ஆக போட்டி மீண்டும் டை ஆனது. ஐசிசி விதிப்படி அதிக பவுண்டரி அடித்த அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், தோல்விக்கு பின் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீசம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள். விளையாட்டை தவிர வேறு ஏதாவது எடுத்துக் கொள்ளுங்கள். 60 வயதில் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இறந்து போங்கள் என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். இப்போட்டியில் இங்கிலாந்து 24 பவுண்டரி அடித்துள்ளது. ஆனால் நியூசிலாந்து 17 பவுண்டரிகளே அடித்திருந்தது. இதன் அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவித்ததால் ஜிம்மி நீசம் சாடியுள்ளார்.
Kids, don’t take up sport. Take up baking or something. Die at 60 really fat and happy.
— Jimmy Neesham (@JimmyNeesh) July 15, 2019