வாழைத் தண்டு மற்றும் வாழைப்பூவில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு சாப்பிட வேண்டும். அது இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதன்படி வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை அதிக அளவில் மருத்துவ குணங்கள் உள்ளன. வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் சிக்கலை தீர்க்கும். மலச்சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் வீதம் தினமும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.
மேலும் கோழைக் கட்டையும் இளகச் செய்யும். பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும். வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு எடுக்காமல் சாப்பிட்டால் ஊட்டச் சத்து வீணாகாமல் அப்படியே உடம்புக்கு கிடைக்கும். அது பல வியாதிகளுக்கு அருமருந்தாக அமையும். இதனை வாரத்தில் ஒரு முறையாவது சாப்பிடுவது மிகவும் நல்லது.