Categories
தேசிய செய்திகள்

கொடூரனால் கொல்லப்பட்ட தந்தை…. உடலை தோளில் சுமந்து சென்ற மகள்…. கண்கலங்க வைக்கும் புகைப்படம்…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரால் கொல்லப்பட்ட தந்தையை மகள் தோளில் தூக்கி செல்லும் புகைப்படம் காண்போரை கண்கலங்க வைக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு கௌரவ் சர்மா என்பவர் 20 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனை அறிந்த இளம் பெண்ணின் தந்தை இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பிறகு கைதுசெய்யப்பட்ட கௌரவ் சர்மாவிற்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த சர்மா தான் துஷ்பிரயோகம் செய்த பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையின் கொலைக்கு நீதி வேண்டும் என்று கேட்டுக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் அவர் தன் தந்தையின் உடலை தோளின் மீது சுமந்து செல்லும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Image

Categories

Tech |