திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மற்ற பிறந்தநாள்களை போல இல்ல. இந்த பிறந்தநாள் சற்று மாறுபட்ட பிறந்தநாள். இந்த பிறந்தநாள் வருகின்ற காலகட்டம் இருக்கிறதே, இது ஒரு சாதாரண தேர்தல் காலத்தில் மட்டும் வருவதால் முக்கியத்துவம் பெற்து விடுகின்றது என்று நீங்கள் நினைக்கக்கூடாது. தேர்தல் காலங்களில் இதற்கு முன்பும் பிறந்த நாள்கள் வந்திருக்கலாம்.
ஆனால் இந்த தேர்தலின் போது வருகின்ற பிறந்தநாள் இயக்கின்றது அல்லவா, இந்த பிறந்தநாள் எப்படி முக்கியம் என்று சொன்னால், இந்த தேர்தல் எவ்வளவு முக்கியம் என்று நாம் உணர்ந்து கொண்டால்தான் தேர்தலின்போது வருகின்ற இந்த பிறந்தநாள் எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. ஒரு சட்டமன்றத்திற்கான ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமே நடக்கின்ற தேர்தலாக தயவுசெய்து எண்ணிவிடக்கூடாது. நாளை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி செய்ய போகிறார், அதிகாரம் செய்யப்போகிறார் ,என்பது உண்மை. ஆனால் ஒரு ஆட்சி மாற்றம் மட்டுமே இந்த தேர்தலின் நோக்கம் என்றால் இல்லை.
இந்த தேர்தல் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தின் வரலாற்றினை எழுதப் போகிற தேர்தல். ஆகவே ஒரு ஆட்சி மாற்றத்திற்கு மட்டுமே நடக்கின்ற தேர்தல் அல்ல. இந்த தேர்தல் என்பது அடுத்த 25 ஆண்டுகளுக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகம் எப்படி எவ்வாறு பயணிக்க போகிறது ?
தமிழகம் இதுவரை பயணித்து வந்திருக்கின்ற பாதை பெற்றிருக்கின்ற உரிமைகளையும், நாம் பெற்றிருக்கின்ற சலுகைகளையும், தமிழ்நாட்டில் அடித்தட்டு சமூகங்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பெற்றிருக்கின்ற முன்னேற்றங்களையும், தமிழ் மொழிக்கு தமிழினத்திற்கு தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கின்ற வளர்ச்சியையும், பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தேர்தலாக இந்த தேர்தல் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இங்கே வந்து… பொதுக்கூட்டத்தில் பேசுகின்றபோது சொல்லி இருக்கின்றார், வரக்கூடிய தேர்தல் தமிழ்நாட்டு முடிவுகள் என்ன செய்யப் போகிறது என்று சொன்னால் ஒரு இரட்டை எஞ்சின் போட்டு முன்னேற்ற பாதைக்கு எடுப்பதற்கான தேர்தல் இந்த தேர்தல் என்று சொல்கிறார். இரட்டை எஞ்சின் என்று யாரை சொன்னார் என்று சொன்னால்…. ஒன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இன்னொன்று பாஜக. இவர்கள் இரண்டு பேரும் ரெட்டை என்ஜினாக இருந்து இவர்கள் இந்த தமிழ் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கு நடத்தப்படுகின்ற தேர்தல் என்று சொல்கிறார்.
அதற்கு நான்கு நாட்கள் ஐந்து நாட்களுக்கு முன்னால் இந்த தேசத்தின் உடைய பிரதமர் இங்கு வந்தார்… திரு நரேந்திர மோடி அவர்கள் இந்த தேசத்தின் உடைய பிரதமர் திராவிட முன்னேற்ற கழகத்தை எப்படி விமர்சித்தார் என்பதை பத்திரிகையில் படித்து இருப்பீர்கள் .
ஒரு மூர்க்கத்தனமான அரசியலை தமிழ் நாட்டில் அரங்கேற்ற இயக்கம் என்று சொன்னார். வாரிசு கொள்கையை அமல்படுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட இயக்கம் என்று சொன்னார். ஊழலைத் தவிர வேறு எதையும் சிந்தித்துப் பார்க்காத ஒரு இயக்கம் இந்த இயக்கம் என்று சொன்னார். அவர் சொல்கின்ற போது அவருக்கு மேடையிலே அந்தப் பக்கம் இந்தப் பக்கமும் யார் இருப்பார்கள் ? என்று சொன்னால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்….
ஒருபுறம் நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி, இன்னொருபக்கம் நமது துணை முதலமைச்சர் மாண்புமிகு பன்னீர்செல்வம், இவர்கள் இரண்டு பேரையும் வைத்துக்கொண்டு இவர்கள் பேசுகின்ற இந்த வாசகங்கள் அம்மையார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கலாச்சாரம் இந்த மண்ணில் தொடர்வதற்கு இந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அமிர்ஷா கேட்கிறார். இதற்கான முடிவுகளை சொல்வதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல்.
ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டும் இந்த தேர்தல் அல்ல. இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் சொல்கின்ற அந்த பதில் இருக்கின்றது அல்லவா… கடந்த ஆறு ஆண்டுகள்…. 7 ஆண்டுகள் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டு இருக்கின்ற அத்தனை அநீதிகளையும் மத்திய அரசால், மோடி அரசால் ,பாஜக அரசால், இழக்கப்பட்ட அநீதிகளையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள போகிறார்களா ? என்று பதில் சொல்கின்ற தேர்தலாக தான் இந்த தேர்தலை பார்க்கவேண்டும்.