தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து மதுரையில் தண்ணீர் விலை உயர்ந்துள்ளது. மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து சமையல் சிலிண்டரின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 ரூபாய் உயர்ந்து 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலையேற்றத்தை தொடர்ந்து காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களும் உயர்ந்து கொண்டு வருகிறது.
அந்த வரிசையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தனியார் குடிநீர் வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் டீசல், விலை உயர்வை கருத்தில் கொண்டு தண்ணீர் விலையை உயர்த்தி உள்ளதாக கூறியுள்ளனர். மார்ச் 1ஆம் தேதி முதல் பெரிய சிறிய குடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அதைவிட மூன்று ரூபாய் அதிகரித்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர வர்க்கத்தினரும், ஏழை குடும்பத்தினரும் தண்ணீர்கூட வாங்க முடியாமல் போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.