இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறியதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் அடைந்து வருவதால் ஆங்காங்கே பல பேரிடர் ஆபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதே போல் இந்தோனேசியாவில் உள்ள சினா பங்க் எரிமலை கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெடிக்கும் நிலையில் இருந்தது. இந்நிலையில் சீனா பங்க் எரிமலை இன்று வெடித்து சிதறியுள்ளது.
எரிமலை வெடித்ததில் 5000 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியது. இதனால் பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அங்கு சாம்பல் புகை காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.