மாடு இறந்த சோகத்தில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தலிங்கபுரம் பகுதியில் மாடகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடு வியாபாரம் செய்து வந்ததால் 22 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாட்டினை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த மாட்டிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அது இறந்து விட்டது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த மாடகண்ணு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் மயங்கிய நிலையில் இருந்த மாடகன்னுவை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.