மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக சுவர் பழுதடைந்து இருந்தன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.