ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சண்முகராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகராஜா ஆட்டோவில் சிவந்திபட்டி சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஒரு திருப்பத்தில் திரும்பும்போது சண்முகராஜா நிலைதடுமாறி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து விட்டார்.
இதில் பலத்த காயமடைந்த சண்முகராஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சண்முகராஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.