Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குழந்தை இல்லாத விரக்தி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கலாசிபாளையம் பகுதியில் கார்த்திக் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் திவ்யா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |