Categories
உலக செய்திகள்

“தடை செய்யப்பட்ட மருந்துகள்”… அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்த மருந்தாளர்… சரியான தண்டனை கொடுத்த நீதிபதி…!!

பிரிட்டனில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அதிக லாபம் வைத்து விற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் Balkeet Singh Khaira என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் வசித்து வருகிறார். இவர் West Bromwich என்ற பகுதியில் உள்ள மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை 2016 மற்றும்  2017 ஆண்டுகளில்  அதிக விலைக்கு  போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு விற்றதாக Balkeet  மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சட்டவிரோதமாக விற்கப்பட்ட அந்த மருந்துகளின் மதிப்பு ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த மாதம் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இன்று மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில் Balkeet  தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு 1 வருட சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதே மருந்தகத்தில் பணிபுரியும் Balkeet  -ன் தாய் அவர் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்று கூறி வருகிறாராம்.

Categories

Tech |