தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ள்ளனர். மேலும் சில கட்சிகளில் கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகின்றது. அதிமுக கட்சி கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் அதே தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தெரிவித்த அதே தொகுதிகளில் திமுக நிற்பதால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. தொகுதி பங்கீட்டில் திமுகவிடம் நெகிழ்வுத்தன்மை இல்லாததால் கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா என்பது குறித்து காங்., இடதுசாரிகள் ஆலோசிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.