அகமதாபாத் பிட்ச்சின் தரம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் போகன் கேலி செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது 3 டெஸ்ட் போட்டி முடிவுற்ற நிலையில் 4வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பிட்ச் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் ஐந்து நாட்களுக்கு நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்துள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இப்படியா பிட்ச்சை தயார் செய்வது என்று பல இங்கிலாந்து வீரர்கள் சமுக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பிட்ச்சின் தரம் குறித்து கேலி செய்யும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் போகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலர் பிட்ச்சின் தரம் குறித்து ஆராய வேண்டும் என ஐ.சி.சி-யிடம் புகார் அளித்துள்ளனர். அப்போது நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இதுபோல் அமைந்தால் மைதானத்தின் பிட்ச்சின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என பிட்ச்சின் ஐ.சி.சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.