தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிரதான கட்சிகளாக இருக்கும் அதிமுக – திமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள. மேலும் மக்கள் நீதி மையம் சார்பாக மூன்றாவது அணியும் களம் காண்கின்றது. இதனிடையே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளனர்.
பிரதான கட்சிகளாக இருக்கும் திமுக – அதிமுக கூட்டணி கட்சிகளை இறுதி செய்து வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலை திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு தெரிவித்து அதே தொகுதியில் திமுக நிற்பதால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் நெகிழ்வுத் தன்மை இல்லாததால் கூட்டணியில் தொடரலாமா ? வேண்டாமா ? என்பது குறித்து காங்கிரஸ் இடதுசாரிகள் ஆலோசித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.