Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எளிதில் குறைக்க… இந்த ரெசிபிய… ட்ரை பண்ணி பாருங்க..!!

பாகற்காய் தால் செய்ய தேவையான பொருட்கள்:

பாகற்காய்                   – 1
வெங்காயம்                – 1
துவரம் பருப்பு            – 1/2 கப்
எண்ணெய்                   – 1 டிஸ்பூன்
உப்பு                                – தேவையான அளவு
புளிச்சாறு                     – 3 டேபிள் டிஸ்பூன்
நாட்டு சர்க்கரை        – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள்          – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள்                  – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்                – 1டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்                    – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு                                – 1 டிஸ்பூன்
உளுத்தம் பருப்பு        – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை            – சிறிதளவு
துருவிய தேங்காய்   – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், பாகற்காயை எடுத்து தண்ணீர்ல நல்லா கழுவினதும், சின்ன துண்டுகளாக நறுக்கனும். பிறகு அடுப்பில கடாயை வச்சி சூடானதும், எண்ணெய் ஊற்றினதும், நறுக்கி வச்ச வெங்காயம்,பாகற்காயை போட்டு நல்லா வதக்கி இறக்கிக்கணும்.

பின்னர் துவரம்பருப்பை குக்கர்ல போட்டு, நல்லா தண்ணீர்ல கழுவினதும், அதில வதக்கி வச்ச பாகற்காய், வெங்காயத்தை போட்டு, வேகுற அளவுக்கு தண்ணீர் ஊற்றினதும், முடி அடுப்புல வச்சி 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்கி வச்சி குக்கரை திறந்து, நல்லா மசிச்சுக்கிடனும்.

மேலும் மசிச்சு வச்ச பாகற்காயை கடையில போட்டு அடுப்புல வச்சி, கிழறி விட்டதும், அதுல புளிச்சாறு, ருசிக்கேற்ப உப்பு, நாட்டு சக்கரை, மிளகாய் தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் போட்டு நல்லா கிளறிவிட்டு கொதிக்க வைச்சி மசாலா வாட போனதும் இறக்கிக்கணும்.

பிறகு  கடாயை வச்சி எண்ணெய் ஊற்றி சூடேறினதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய தேங்காய போட்டு தாளித்து, நல்லா சிவந்து வதங்கினதும் இறக்கி, கொதிக்க வச்ச பாகற்காய் கலவையில் ஊற்றினதும், கரண்டியால் கரண்டியால் நல்லா கிளறிவிட்டு சூடாக சாதத்துடன் பரிமாறினால் ருசியான பாகற்காய் தால் ரெடி.

Categories

Tech |