பிரித்தானியாவில் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்துவந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு மருந்து கடையிலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வழங்கப்படும் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்க மருந்து கடை உரிமையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் பிரித்தானியாவில் வெஸ்ட் பிரோம்விச் என்ற நகரில் பல்கித் சிங் கைரா என்பவர் மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்.கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே வழங்க வேண்டிய சில மருந்துகளை மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து கடைக்காரர் விற்று வந்ததை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்தனர்.
மேலும் அவர் 10 லட்சம் பவுண்டுகள் அளவிற்கு மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்று சம்பாதித்தது தெரியவந்துள்ளது. இதனை பிரித்தானியாவின் காவல்துறையினர் கண்டறிந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து அந்த மருந்துக்கடை உரிமையாளரை கைது செய்தனர். அதன் பிறகு வழக்கு பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் பல்கித் சிங் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஆகையால் நீதிபதி அவருக்கு 12 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.