திருப்பூரில் ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராகுல் (24), ரபிக் (24), ஷாகித் (25), ஷாஜித் (21), இர்சாத் (38), காசிம்கான் (45). இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் மிஷினை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் திருடிய காரை விஜயமங்கலத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கண்டெய்னர் லாரியில் சேலம் நோக்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில் விஜயமங்கலத்தில் இருந்து சென்ற கண்டெய்னர் லாரியின் நம்பரை வைத்து காவல்துறையினர் கொள்ளையடித்து சென்று அந்த ஆறு பேரையும் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள தனியார் குடோனில் வைத்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து கொள்ளையர்களிடம் இருந்து ஏடிஎம் மெஷினில் கொள்ளை அடித்த பணம் மற்றும் 2 நாட்டு துப்பாக்கிகள்,9 தோட்டாக்கள், வெல்டிங் இயந்திரம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.