Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்’..‌. தெறிக்கவிடும் ‘காடன்’ டிரைலர்…!!!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் இயக்குனர் பிரபு சாலமன் கொக்கி, லாடம் ,லீ, மைனா ,கும்கி, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் நடிகர்கள் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காடன்’. மேலும் இந்தப் படத்தில் சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா ,புல்கிட் சாம்ராட் ,டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் ‌ . தமிழ், இந்தி ,தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது இந்த படம் வருகிற மார்ச் 26 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது . இந்த ட்ரெய்லரிலிருந்து யானைகள் தங்கியிருக்கும் காட்டை அழித்து அதை நகரமாக முயற்சி செய்யும் அமைச்சருக்கும் யானைகளை காப்பாற்ற துடிக்கும் ஒருவருக்கும் நடக்கும் போராட்டம் தான் ‘காடன்’ படத்தின் கதை என்பது தெரிகிறது . ‘யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்’ என்ற ராணா ரகுபதியின் வசனத்துடன் ட்ரெய்லர் நிறைவடைகிறது .

Categories

Tech |