ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தை விட பணத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது என்று டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரும், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரிலும் விளையாடி வருபவர் டேல் ஸ்டெய்ன். இவர் நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை பணத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது. அங்கு எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்?, ஏலம் எவ்வளவு பணம் எடுக்கலாம்? என்பதுதான் பரவலாகப் பேசப்படுகின்றது.
இதனால் ஐபில் கிரிக்கெட் தொடரை ஆடினால் எனக்கு கிரிக்கெட் மறந்துவிடும். ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் ஆகியவை கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. எனவேதான் நான் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளேன் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் மீதான இவரது விமர்சனம் சர்ச்சையை கிளப்பியதால் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.