Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST IN: அதிமுகவில் 8200 பேர் விருப்பமனு தாக்கல்…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவில் 8,200 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் .மாலை 5 மணியுடன் விருப்ப மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமனு தாக்கல் பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நேர்காணல் நாளை ஒரே நாளில் நடைபெற இருக்கிறது.

Categories

Tech |